No title


AI என்னும் புரட்சி உலகம்


எப்படி தொழில் புரட்சி வந்தபோது West என்று சொல்லக்கூடிய வெள்ளைக்காரன் அதை முதலில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் நாடுகளை வளப்படுத்தி கொண்டானோ அதே போல இன்று செயற்கை நுண்ணறிவியல் AI வளர்ச்சியை முதலில் கற்று, பயன்படுத்தி, தெளிவு பெற்று, அதில் ஆராய்ச்சிகள் செய்து Top லேயரில் உட்காருகிறார். 


நாளை இந்த தொழில்நுட்பத்தை அவர்களிடம் பெற வேண்டும் என்றால் ஆயிரத்து எட்டு கண்டிஷன் போடுவார்கள். இன்று டிரோன் தொழில் நுட்பம், அணு ஆயுத தொழில் நுட்பம், F16, ரபேல், சுகோய் 35 போன்ற  தொழில் நுட்பங்களை நம்மிடம் விற்று பில்லியன் கணக்கில் காசு பார்க்கிறார்களோ அதே போல் நாளை AI நுட்பத்தையும் நம்மிடம் விற்று காசு பார்ப்பார்கள். 



இன்றைக்கு இணையம் மூலம் இதை உடைக்க முடியும். இப்போதே நம்மவர்கள் இதில் நுழைந்து, அதில் உள்ள தொழில் நுட்பங்களை படித்து, ஆராய்ச்சி செய்து முன்னணிக்கு வர வேண்டும் (சீனர்கள் பிட் காயின் தொழில் நுட்பம் வந்தபோது விரைவாக அடாப்ட் செய்து பணம் பார்த்தது போல) 


இதில் அரசு எந்த வகையிலும் உதவி செய்ய இயலாது, அவர்களிடம் அதற்கான மோட்டிவேஷன், நேரம், பணம் எதுவும் கிடையாது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி, இதில் இறங்க வேண்டும். 


செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பொறுத்த வரை தினம் ஒரு புதிய செய்து வந்துகொண்டு இருக்கிறது.


கணினி உலகில் AI ஒரு அசுர பாய்ச்சலை நோக்கி பயணிக்கிறது. கல்லூரிகள், சிறு நிறுவனங்கள் AI டாஸ்க் போர்ஸ் உடனே ஆரம்பிக்க வேண்டும். டிரெண்டிங் ஆக இருக்க வேண்டும் என்றால் "AI War Room " என்று கூட ஆரம்பிக்கலாம். 


கடந்த மூன்று மாதங்களில் என்ன வகையான புதிய கருவிகள் வந்து இருக்கிறது., அதை எப்படி தங்கள் நிறுவனத்துக்கு அல்லது கல்லூரிக்கு பயன்படுத்த இயலும். எந்த கருவி காசு. எந்த கருவி இலவசம். இது போன்ற கருவியை பயன்படுத்தி அந்த ஊருக்கோ அல்லது மாநிலத்துக்கோ என்ன வகையான புதிய கருவிகளை கொடுக்க முடியும். விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியும். மாணவர்களுக்கு என்ன செய்ய முடியும். வேலை தேடுபவர்களுக்கு என்ன வாய்ப்புகள் கொடுக்க முடியும். அல்லாது நீங்கள் என்ன வகையில் உங்கள் பணிகளை விரைவாக செய்ய முடியும். என்பதை எல்லாம் போர்க்கால அடிப்படையில் கற்று தெளிக.


செயற்கை நுண்ணறிவியலை இப்போது அரவணைத்து கொள்ளவில்லை என்றால் நிறுவனங்கள் நோக்கியா நிறுவனம் போல காணாமல் போய் விட வாய்ப்பு உண்டு. உங்களுக்கு 25 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், 10 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் நிறுவனம் உங்களை வேலையை விட்டு அனுப்பி விட வாய்ப்பு இருக்கிறது. பயப்படாதீர்கள் உலகம் எங்கும் மொத்தம் 300 மில்லியன் பணிகளை AI விழுங்க இருக்கிறது. ஆனால் புதிதாக பல மில்லியன் பணிகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு. 


இந்த தொழில் நுட்பத்தை நாம் இப்போது கற்கவில்லை என்றால் வெஸ்டர்ன் வேல்டு எனப்படும் மேலை நாடுகள் நம்மை தொழில் நுட்ப அடிமையாக வைத்து டிஸ்கிரீமினேசன் செய்ய வாய்ப்பு இருக்கிறது, ஆகவே புத்தியாக பிழைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. 

Post a Comment

Previous Post Next Post

Contact Form