வைகை என்ற கனவு ரயில்

47 வருடங்களாக ஒரு ரயில், iconic ரயிலாக இருக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறது வைகை எக்ஸ்பிரஸ். 1977ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயிலுக்கு இன்றோடு வயது 47. 


மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் பகல் நேர ரயில் வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையின் அடிப்படையில் இந்த ரயில் விடப்பட்டது.

1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை ஆறு மணிக்கு மீட்டர் கேஜ் பாதையில் மதுரையிலிருந்து கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்டது வைகை.



ரயிலின் முகப்பில் பாண்டியர்களின் சின்னமான இணை கயல்களும் செண்டையும் பொறிக்கப்பட்டிருந்தன.

மஞ்சள் நிறத்தில் மொத்தம் 16 பெட்டிகள். ஆறு மணிக்குப் புறப்பட்ட ரயில் சென்னை எழும்பூரை மதியம் 1.05க்கு சென்றடைந்தது. மொத்தம் ஏழு மணி நேரம் 5 நமிடங்கள். 

இது அகலப் பாதையில் செல்லும் அதிவேக ரயில்களின் வேகத்திற்கு இணையாகச் சென்றது.

ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக வேகம் குறைக்கப்பட்டு பயண நேரம் 7 மணி 40 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என மொத்தமே 3 இடங்களில்தான் இந்த ரயில் நிற்கும்.



அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே பிரபலமான வைகை, 'கார்ட் லைனின் அரசன்' என்று அழைக்கப்படும் அளவுக்குப் புகழ்பெற்றது. 1999ல் இருந்து மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகல ரயில் பாதையில் இயக்கப்பட்ட இந்த ரயிலின் எஞ்சின் WAP-7 மின்சார லோகோமோடிவாக மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி இந்த ரயில் மதுரைக்கும் சென்னைக்கும் இடையிலான 495 கி.மீ. தூரத்தை வெறும் 6 மணி நேரம் 34 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தது.

கவனிக்கத்தக்கவை: இந்த புகழ்பெற்ற ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மிகச் சாதாரணமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

ரயிலுக்கு அழகிய தமிழில், மதுரையின் உயிர்நாடியான வைகை நதியின் பெயர் சூட்டப்பட்டது. மேலும், இந்த ரயில் ஓட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இரு முறை மட்டுமே சிறு விபத்துகளை சந்தித்திருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form