How To Change Voter ID Address? (TAMIL)

 வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? 

இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் முகவரியை எளிதாக மாற்றலாம்.

🗳️ உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தொடர்பான இணையதள பகுதிக்குச் சென்று, Online Voter Registration என்ற பகுதியை கிளிக் செய்து கொள்ளவும்.


🗳️ அடுத்து திறக்கும் பக்கத்தில் காட்டப்படும் option-களில் Form 8-ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

🗳️ புதியதாக Open பக்கத்தில் Signup செய்து பதிவு செய்து கொண்டு தொலைபேசி எண் மற்றும் பாஸ்வேர்ட், கேப்சா கொடுத்தால் OTP நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு வரும்.

ஓடிபி எண்ணை கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.

🗳️ உங்களுடைய வாக்காளர் அட்டை எண்ணை கொடுக்க வேண்டும்.

🗳️ ஓபன் ஆகும் Form-8 படிவத்தில் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி, மாநிலம், தொகுதி மற்றும் உங்கள் புதிய முகவரி போன்ற விவரங்களை கேட்கப்பட்டுள்ள இடங்களில் நிரப்பவும்.

🗳️ ஆதார் அட்டை எண் கேட்கும் அதையும் நீங்கள் பதிவிட வேண்டும்.

🗳️ தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியைக் குறிப்பிடும் ஏதேனும் ஓர் ஆவணத்தைப் பதிவேற்றவும்.

 (பயன்பாட்டில் உள்ள EB பில், வங்கி பாஸ் புத்தகம், ஆதார் அட்டை அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணம் போன்றவை).

🗳️ ஆவணங்களை பூர்த்தி செய்து பதிவேற்றியவுடன், ஆன்லைனில் காண்பிக்கும் விவரங்களை சரி பார்த்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.

🗳️ தொடர்ந்து, ஒரு குறிப்பு எண்ணைப் (Reference number) பெறுவீர்கள். அதை நீங்கள் ஆன்லைனில் உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க (Status ) பார்க்க பயன்படுத்தலாம்.

🗳️ உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், அது தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.

🗳️ சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், குறிப்பிடப்பட்டுள்ள உங்களின் தற்போதைய முகவரியுடன் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் வரும்.


Thanks for reading and share with your friends 
.
.
.
.
.

Our latest Blogs 

1. புதிய குடும்ப அட்டை (ரேசன் கார்டு) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமா ?? : https://pocketliterature2022.blogspot.com/2023/09/blog-post_30.html

2. International Day of Awareness of Food Loss and Waste 2023 : https://pocketliterature2022.blogspot.com/2023/09/international-day-of-awareness-of-food.html

3. Rare metal Vanadium, key for batteries, discovered in India’s Gujarat:


4. WOMEN’S RESERVATION BILL 2023 : 


6. ADITYA-L1:




For more stories click the blog link:






Post a Comment

Previous Post Next Post

Contact Form