NEW ERA OF AIR INDIA
இந்திய அரசிடம் இருந்து டாட்டாவிற்கு விற்பட்ட ஏர் இந்திய விமான நிறுவனம் உலகிலேயே அதிக விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரை இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களை Boeing மற்றும் Airbus நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது Air India. இதன் மூலம் மொத்தம் 470 விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்திற்காக உருவாக உள்ளன.
Airbus விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும் Boeing நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. வணிக (commercial) விமான துறையில் இப்போது இதுதான் உலகின் மிக பெரிய ஆர்டர்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவையை உலக தரத்தில் கொண்டு வரவும், ஆசிய பகுதிகளில் அதிகரித்து வரும் விமான துறை சார்ந்த வளர்ச்சியும் இந்த புதிய ஆர்டரின் முக்கிய நோக்கம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆர்டர் மூலம் அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என வெள்ளை மளிகை (White House ) அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு சேர்த்து Rolls Royce நிறுவனத்திடம் இருந்து Trent XWB வகை என்ஜின்கள் வாங்கவும் ஒப்பந்தம் செய்து இருக்காங்க ஏர் இந்தியா.
இந்த விமானங்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்திய விமான துறை உலக தரத்திற்கு உயர்ந்தால் மகிழ்ச்சி தான்.
■ Air India to purchase 220 Boeing aircraft, US President Joe Biden hails it as a "historic agreement"