வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான
சுருக்க கையேடு
முந்தைய நாளில் செய்ய வேண்டியவை
- தலைமை அலுவலர் — பிற்பகல் 12.00 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்குச் சென்று பணிக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- அடிப்படை வசதிகளும் உபகரணங்களும் இருப்பதை BLO / கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் உறுதி செய்து கொள்ளவும்.
- மண்டல அலுவலர் (Zonal Officer) அளிக்கும் தேர்தல் பொருட்கள் அனைத்தையும் பட்டியலின்படி சரிபார்த்துப் பெறவும்.
- EVM மற்றும் VVPAT முகவரி அட்டைகளை (Address Tag) கொண்டு உங்கள் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கீடு சரிபார்க்கவும்.
- அழியாத மை (Indelible Ink) — 700 வாக்காளர்களுக்கு ஒரு குப்பி; அதிகம் இருந்தால் இரண்டு. மணல் நிரப்பிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் வையுங்கள்.
- வாக்குச்சாவடிக்கு வெளியே 100 மீட்டர் சுற்றளவில் அரசியல் விளம்பரங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
- உள்ளே எந்த அரசியல் படமும் கட்சி சின்னமும் தெரியாமல் மறைத்து மூடிவிட வேண்டும்.
- அனைத்து அலுவலர்களும் காவலர்களும் வந்துள்ளனரா என உறுதி செய்க; வராதவர்களுக்கு ரிசர்வ் பட்டியலிலிருந்து நியமனம் செய்யவும்.
- வாக்களிக்கும் பகுதி (Voting Compartment) போதுமான வெளிச்சத்துடன், ஜன்னல் & கதவு பகுதியிலிருந்து தனிப்பட்டதாக இருக்க வேண்டும்; VVPAT மீது நேரடி வெளிச்சம் படக் கூடாது.
- Arrow Crossmark ஸ்டாம்ப், Metal Seals, Mock Poll Slip ஸ்டாம்ப், Distinguished Mark சரிபார்க்கவும்.
- வாக்காளர் பட்டியலின் மூன்று நகல்கள் முழுமையாக உள்ளதா, துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
- குறியீட்டு படியில் PB, EDC, ASD மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது; வேறு குறிப்புகள் இல்லை என உறுதிப்படுத்தவும்.
- வழங்கப்பட்ட பச்சைத்தாள் முத்திரை (Modified Green Paper Seal) எண்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்.
- வாக்குச்சாவடி முகவர்களுக்கு அலுவலர்களுக்குப் பின்புறம் இருக்கை ஒதுக்கீடு செய்வது மிகவும் சிறந்தது.
- VVPAT கேபிளை CU உடன் இணைக்கவும்; கேபிள் வழியில் பெஞ்சால் தடுப்பு ஏற்படுத்தவும்.
- 20 எண்ணிக்கையில் ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும்; எண்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்.
- வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்களை நீங்களே பாதுகாக்க வேண்டும்; வாக்குச்சாவடியிலேயே தங்க வேண்டும்.
- அறிவிப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் ஒட்டவும்; Form 7A ல் வேட்பாளர்கள் பட்டியலையும் ஒட்டவும்.
- எக்காரணத்தைக் கொண்டும் VVPAT ஐ முந்தைய நாளில் இயக்கிப் பார்க்கக் கூடாது.
EVM & VVPAT இணைப்பு நடைமுறை
BVC நினைவில் வையுங்கள்!
Ballot Unit → VVPAT, VVPAT → Control Unit. கேபிள்கள் முற்றிலும் இணைக்கும் வரை CU ஐ SWITCH OFF ஆக வையுங்கள்.
90 நிமிட முன் தயாரிப்பு
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே இயந்திரங்களை பெட்டிகளிலிருந்து எடுத்து கேபிள்களை இணைக்கவும்.
ஒற்றை BU இணைப்பு
BU கேபில் → VVPAT; VVPAT கேபில் → CU. Thumb wheels: 01. வேட்பாளர்கள் 1–16.
இரட்டை BU இணைப்பு
2nd BU → 1st BU; 1st BU → VVPAT; VVPAT → CU. BU-1: 1–16, BU-2: 17–32.
Knob திருப்புதல்
கேபிள் இணைத்த பின் VVPAT பின்பக்க Knob ஐ Vertical Position (Working Mode) க்கு திருப்பவும். பின்னர் CU ON செய்யவும்.
7 Slips சரிபார்ப்பு
CU ON ஆனதும் 7 Slips Print ஆகும். அனைத்தும் PASS என்று இருக்கின்றதா சரிபார்க்கவும். Printer Error வந்தால் உடனே மண்டல அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
Physical Layout
BU + VVPAT → Voting Compartment. CU → PO-3 மேசை மீது.
மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll)
கட்டாய எச்சரிக்கை
மாதிரி வாக்குப்பதிவை Clear செய்யாமல் உண்மையான வாக்குப்பதிவை தொடங்கக் கூடாது.
EVM & VVPAT சீலிங் (முத்திரையிடல்)
பச்சைத்தாள் முத்திரை
முத்திரையின் பின்புறம் A & B என்ற பசையுள்ள தாள் இருக்கும். Result Section ல் உட்புற கதவில் (Inner Door) முத்திரையை பொருத்தவும்.
சிறப்பு அட்டை
Special Tag எண்ணை முகவர்களுக்கு தெரிவிக்கவும். Close பொத்தான் தெரியும்படி Tag ஐ பொருத்தி Result Section வெளிப்புற கதவை மூடவும்.
முகவரி அட்டை
வெளிப்புற கதவின் இடது பக்கம் துளை வழியாக நூல் கடத்தி Address Tag பொருத்தி PO முத்திரையிட வேண்டும்.
Drop Box சீல்
மாதிரி வாக்குப்பதிவு Slips அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டன என உறுதி செய்து Drop Box ஐ நூல் மற்றும் Address Tag கொண்டு சீல் வையுங்கள்.
முக்கியக் குறிப்பு
உங்கள் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட Green Paper Seal மற்றும் Special Tag மட்டுமே பயன்படுத்தவும்.
வாக்குப்பதிவு நாளில் நடைமுறைகள்
வாக்குச்சாவடி முகவர்கள்
- 90 நிமிடங்களுக்கு முன்பு முகவர்களை அழைத்து Form 10 ல் நியமன கடிதத்தை சரிபார்க்கவும்.
- ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் + இரண்டு Relief முகவர்கள். ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே உள்ளே.
- கட்சி சின்னம் தெரியும் ஆடை / அட்டை அணிந்து வர அனுமதி கிடையாது.
- மாலை 4 மணிக்கு பின் முகவர்களை மாற்ற அனுமதி கிடையாது.
வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி
அடையாள சரிபார்ப்பு
ஆவணத்தைக் கொண்டு அடையாளம் உறுதி செய்யவும். வரிசை எண் சத்தமாக சொல்லவும். ஆண் = குறுக்கு கோடு; பெண் = வட்டம்.
மை & 17A பதிவு
இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை இடவும். 17A ல் ஆவண எண்ணின் கடைசி 4 இலக்கங்களுடன் பூர்த்தி செய்யவும்.
Ballot & VVPAT
Slip பெற்று விரல் மை சரிபார்க்கவும். CU ல் Ballot பொத்தானை அழுத்தி வாக்காளரை Voting Compartment ல் அனுமதிக்கவும்.
VVPAT Beep & 7 வினாடி திரை
BU ல் வாக்களித்ததும் VVPAT திரையில் 7 வினாடிகள் பெயர் & சின்னம் ஒளிரும். Slip Drop Box ல் விழும், Beep கேட்கும். Beep கேட்காவிட்டால் வாக்காளர் வாக்களிக்கவில்லை என்பது அர்த்தம்.
அனுமதிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் (12)
Booth Slip மட்டும் கொண்டு வாக்களிக்க அனுமதி கிடையாது.
சிறப்பு வாக்கு நடைமுறைகள்
வாக்களிக்க மறுப்பு
17A ல் கையொப்பமிட்ட பின் மறுத்தால் கட்டாயப்படுத்தக் கூடாது. "Refused to Vote" என குறிப்பிட்டு PO முழு கையொப்பமிட வேண்டும்.
பார்வையற்றோர்
உடல் நலிவால் தனியாக வாக்களிக்க இயலாதவர்க்கு 18+ வயது உதவியாளரை அனுமதிக்கலாம். Annexure 18 ல் Declaration பெறவும். உதவியாளர் வலது விரலில் மை இடவும்.
மறுக்கும் உரிமை
வாக்காளர் வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்தால் "Left without voting" என பதிவு செய்யவும்.
ஆய்வு வாக்கு
வேறொருவர் பெயரில் வாக்களிக்கப்பட்டிருந்தால் உண்மையான வாக்காளருக்கு வாக்குச் சீட்டு மூலம் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கவும்; EVM ல் கூடாது. Form 17B ல் பதிவு செய்யவும்.
சோதனை வாக்கு
VVPAT ல் தவறான சின்னம் தெரிந்தது என புகார் கூறினால் — Annexure பெற்று 17A ல் 2ஆம் பதிவு செய்து சோதனை வாக்கு செய்யவும். Slip சரியாக வந்தால் வாக்காளர் தண்டனைக்கு உரியவர்.
தேர்தல் பணி சான்று
தேர்தல் பணியில் உள்ள அலுவலர் EDC கொண்டு வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலின் கடைசி வரிசைக்கு பின்னர் தொடர் எண்ணிட்டு 17A ல் பதிவு செய்யவும்.
வரிசையில் சலுகை உரிமையுள்ளோர்
- கர்ப்பிணித் தாய்மார்கள்
- வயது முதிர்ந்தோர், இயலாதோர், துணையுடன் வந்தவர்கள்
- கண் பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
எதிர்க்கப்பட்ட வாக்குகள் (Challenged Votes)
முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ரூ.2/- வசூலித்து முழு விசாரணை நடத்தவும். எதிர்ப்பு நிரூபிக்கப்பட்டால் காவல்துறையிடம் ஒப்படைக்கவும். Form 14 ல் பதிவு செய்யவும்.
வாக்குப்பதிவு முடிந்த பின்
- வாக்குப்பதிவு நேரம் முடியும் போது வரிசையில் நிற்கும் அனைவருக்கும் Token (நம்பர் சீட்டு) வழங்கவும்; கடைசியிலிருந்து தொடங்கி வரிசையாக.
- Token கொடுத்த பின் வரும் எவரையும் வரிசையில் அனுமதிக்க கூடாது.
- வாக்குப்பதிவு முடிந்ததும் CU ல் ரப்பர் மூடி அகற்றி CLOSE பொத்தானை அழுத்தி POLL CLOSED செய்யவும்.
- TOTAL பொத்தானை இயக்கி மொத்த வாக்குகளை Form 17C ல் 6ஆவது கலத்தில் குறிப்பிடவும்.
- VVPAT Knob ஐ Horizontal Position (Transport Mode) க்கு மாற்றி பெட்டியில் வையுங்கள்.
- ஒவ்வொரு இயந்திரத்தையும் Address Tag உடன் சீல் வையுங்கள்.
தொகுப்புகள் (Packets) ஒப்படைப்பு
- Form 17C — முத்திரையிடப்படாத உறை
- வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அறிக்கை 1, 2, 3
- Mock Poll VVPAT 50 Paper Slips — கருப்பு உறையில் சீல்
- வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு
- Form 17A பதிவேடு — முத்திரையிட்ட உறை
- பார்வையற்றோர் Form 14A + Annexure 18
- பார்வையாளர் பதிவேடு (Visit Sheet)
- குறியிட்ட வாக்காளர் பட்டியல் (Marked Copy)
- வாக்காளர் சீட்டுகள் (Voters Slip)
- பயன்படுத்தப்படாத / பட்ட ஆய்வு வாக்குச் சீட்டுகள் + Form 17B
- எதிர்க்கப்பட்ட வாக்குகள் Form 14A
- Reference Copies; முகவர் நியமன கடிதங்கள் Form 10
- தேர்தல் பணி சான்றிதழ்கள் (EDC) Form 12B
- எதிர்க்கப்பட்ட வாக்கு ரசீது புத்தகம் + பணம்
- PO Declaration; பயன்படுத்தப்படாத Paper Seals, Special Tags
- வயது குறித்த உறுதிமொழிகள் Annexure 15, 16; ASD உறுதிமொழி
- வாக்குச்சாவடி கையேடு
- அழியாத மை குப்பிகள் (மெழுகு / அரக்கு இட்டு தனியே பாதுகாக்கவும்)
- ஸ்டாம்ப் பட்ஸ்
- Form 7A — வேட்பாளர்கள் பட்டியல்
- வேட்பாளர்களின் கையொப்பம் கொண்ட ஒளிப்பட நகல்
- பயன்படுத்தப்படாத மற்ற படிவங்கள்
ஒப்படைப்பு
Envelope 1/1 — EVM Strong Room. Envelope 2–4 — தனி பாதுகாப்பு அறை.
VVPAT — செய்யவேண்டியவை & கூடாதவை
✅ செய்யவேண்டியவை (DOs)
- போக்குவரத்தில் Paper Roll Knob ஐ Horizontal (பூட்டிய) நிலையில் வையுங்கள்
- வாக்குச்சாவடியில் Knob ஐ Vertical (திறந்த) நிலைக்கு கொண்டு வாருங்கள்
- Color Scheme பின்பற்றி சரியான இணைப்பை செய்யுங்கள்
- CU ON → VVPAT Green LED எரியும் → 7 Slips print ஆகும்
- எந்த இணைப்பு / பிரிப்புக்கு முன்பும் CU ஐ OFF செய்யுங்கள்
❌ செய்யக் கூடாதவை (DON'Ts)
- VVPAT Knob Vertical இல் இல்லாமல் CU ஐ ON செய்யாதீர்கள்
- VVPAT மீது நேரடி வெளிச்சம் படாதீர்கள்
- 7 Slips print & cut ஆகும் வரை CU ஐ OFF செய்யாதீர்கள்
- தேர்தல் முடியும் வரை Paper Roll Knob ஐ திருப்பாதீர்கள்
- Clips அழுத்தாமல் கேபிள்களை எடுக்கவோ போடவோ செய்யாதீர்கள்
EVM மாற்றும் நெறிமுறை
| நிலை | பழுதடைந்தது | செயல் |
|---|---|---|
| Mock Poll | BU மட்டும் | BU மட்டும் மாற்றவும் |
| Mock Poll | CU மட்டும் | CU மட்டும் மாற்றவும் |
| Mock Poll | VVPAT மட்டும் | VVPAT மட்டும் மாற்றவும் |
| உண்மையான வாக்குப்பதிவு | CU அல்லது BU | BU + CU + VVPAT மூன்றையும் மாற்றவும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 1 Mock Poll வாக்கு. |
| உண்மையான வாக்குப்பதிவு | VVPAT மட்டும் | VVPAT மட்டும் மாற்றவும்; Mock Poll தேவையில்லை |
| உண்மையான வாக்குப்பதிவு | CU Battery | CU Battery மட்டும் மாற்றவும் |
| உண்மையான வாக்குப்பதிவு | VVPAT Battery | VVPAT Battery மட்டும் மாற்றவும் |
⭐ நினைவில் கொள்ள வேண்டியவை
- முந்தைய நாளில் எக்காரணத்தைக் கொண்டும் VVPAT ஐ இயக்கிப் பார்க்கக் கூடாது.
- மாதிரி வாக்குப்பதிவில் கட்டாயம் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
- ASD List வாக்காளர் வந்தால் 17A ல் கையொப்பம் மற்றும் கை ரேகை இரண்டும் பெறவும்.
- ஆய்வு வாக்குகளை EVM ல் அல்ல, வாக்குச் சீட்டில் மட்டுமே; 17B ல் குறிக்கவும்.
- VVPAT மட்டும் மாற்றும் நேரில் மறுபடியும் Mock Poll தேவையில்லை.
- EVM முழுமையாக மாற்றும் நேரில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு வாக்கு Mock Poll செய்யவும்.
- VVPAT மீது நேரடி வெளிச்சம் படக் கூடாது; வாக்களிக்கும் பகுதியில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும்.
- ஆய்வு வாக்காளர் Compartment ல் நுழையும் போது CU ல் BALLOT பொத்தான் அழுத்தக் கூடாது.
- Digital Camera Man — Mock Poll, Sealing, வாக்குப்பதிவு தொடக்கம் முன் Voting Compartment ஆவணப்படுத்த வேண்டும்.
- வாக்குப்பதிவு முடிந்ததும் CLOSE பொத்தான் அழுத்தி POLL CLOSED; நேரத்தை கலம் 18A ல் குறிக்கவும்.
- வாக்குச்சாவடிக்குள் யாரும் புகைப்பிடிக்கக் கூடாது.
- முகவர்கள் மொபைல் போன் வாக்குச்சாவடியில் வைத்திருக்க அனுமதி இல்லை.
- Mock Poll Paper Slips பின்புறம் MOCK POLL SLIP ஸ்டாம்ப் மறக்காமல் இடவும்.
- Mock Poll முடிந்ததும் 50 வாக்குகளை மறக்காமல் CLEAR செய்யவும்.
- Test Vote — வேட்பாளர் எண் & பெயர் 17A மற்றும் 17C இரண்டிலும் குறிப்பிட வேண்டும். மிகவும் முக்கியம்.
