தமிழ் வளர்ச்சிக் கழகம் சமீபத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய புதிய சொற்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி, தொழில்நுட்ப வளர்ச்சியிலும், ஊடகத் தொடர்பிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி கழக அலுவலகத்தில் தலைவர் ம.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பேராசிரியர் வ. ஜெயதேவன், மு.முத்துவேலு, சா.சரவணன், மு.இராமசுவாமி, பாரதி பாலன், தி.ஞா.அருள் ஒளி, ஊடகவியலாளர்கள் மு.முருகேசன், திருப்பூர் கிருஷ்ணன், ராஜ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பல புதிய தொழில்நுட்ப மற்றும் இன்றைய காலக்கேற்ப பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகக் கீழ்க்கண்ட தமிழ்ச் சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:
ஆங்கிலச் சொல் | பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ச் சொல் |
---|---|
Artificial Intelligence | செய்யறிவு |
Bluetooth | ஊடலை |
Breaking news | அதிர்வுச் செய்தி |
Bullet train | மின் வேகத் தொடரி/இரயில் |
Chatbot | உரையாடி |
Dating | காதலுணர் காலம் |
Default | இயனிலை |
Disc brake | வட்டுத் தடை |
Earphone | செவி பேசி |
Mayonnaise (Egg) | சுவைக் குழைவு |
Electric chimney | மின் புகைப்போக்கி |
Encrypted Data | குறியாக்கத் தரவு |
Endgame | இறுதியாட்டம் |
Encryption | குறியாக்கம் |
Ethical hacking | நன்னெறிக்க முடக்கம் |
Fibre cable | இழைவடம் |
Firmware | நிலை பொருள் |
Game changer | ஆட்ட மாற்றி / களம் மாற்றி |
Garib Rath train | குறை கட்டண தொடரி/இரயில் |
GIF file | இழப்பில்லாப் பட மாற்றிக் கோப்பு (இ.ப.மா.) |
Malware | கெடுபொருள் |
முடிவுரை:
இந்தச் சொற்கள், தமிழ் மொழியின் நவீன பரிணாமத்தை பிரதிபலிக்கின்றன. இன்று பல தொழில்நுட்பக் கூறுகள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றுக்கு தமிழில் சமமான சொற்கள் உருவாக்குவது மொழிப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.