இன்சுலின் : உயிர் காக்கும் மருந்தின் நூற்றாண்டு!


இருபதாம் நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பு இன்சுலின் மருந்து. இது மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், உலகில் இந்நேரம் நீரிழிவு நோயால் மனித குலமே சீரழிந்து போயிருக்கும்; சிறுநீரகம் செயலிழந்து, கால் இழந்து, பார்வை இழந்து, பக்கவாதம் வந்து கோடிக்கணக்கான பேர் முடமாகி இருப்பார்கள். நடுத்தர வயதிலேயே இதயநோயால் இன்னும் பல கோடி பேர் இறந்திருப்பார்கள்.

இன்சுலினைக் கண்டுபிடித்து உலக அளவில் உயிரிழப்பைக் குறைத்தவர் கள் கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), ມ (Best) மருத்துவ விஞ்ஞானிகள். 1920ம் ஆண்டுவரை உடலில் கணையத்துக்கும் நீரிழிவுக்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும்தான் தெரியும். பாண்டிங், தன்னுடைய ஆராய்ச்சியின் முதல்படியாக, ஆரோக்கியமான ஒரு நாயின் கணையத்தை அகற்றி, அதிலிருந்து ஒரு


திரவத்தைப் பிழிந்து, அதை நீரிழிவு நோயுள்ள நாய்க்கு ஊசிமூலம் செலுத்தினார். என்ன ஆச்சரியம்! அந்த நாயின் ரத்தச் சர்க்கரைக் குறையத் தொடங்கியது. அதை பல நாய்களிடம் சோதித்துப் பார்த்தார். எல்லா நாய்களுக்கும் ரத்தச் சர்க்கரைக் குறைந்தது.


அதைத் தொடர்ந்து, நீரிழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த லியோனார்ட் தாம்சன்' என்ற 19 வயது சிறுவனுக்கு அதைச் செலுத்தினார். அவனுக்கும் நோய் கட்டுப்பட்டது. அதன்மூலம், நீரிழிவு நோய்க்குக் காரணம் இன்சுலின் குறைவு; அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி இன்சுலினைச் செலுத்துவது' என்று பாண்டிங் உறுதி செய்தார். இது நடந்தது 1922-ம் ஆண்டில்.


பாண்டிங், தான் கண்டுபிடித்த திரவத்துக்கு 'ஐலெட்டின்' (Isletin) என்றுதான் பெயரிட்டார். ஆனால், அவருடைய ஆராய்ச்சிக்கு உதவிய 'மேக்ளியாட்' எனும் விஞ்ஞானி, அதற்கு 'இன்சுலின்' (Insu- lin) என்று பெயர் மாற்றிவிட்டார். லில்லி என்ற மருந்து நிறுவனம் முதன் முதலில் இந்த இன்சுலினைத் தயாரித்துக் கொடுத்தது. நாயிடம் பெறப்பட்ட இன்சுலினுக்கு ஒவ்வாமை குணங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் மாடு / பன்றி கணையத்திலிருந்தும் இன்சுலினைத் தயாரித்தார்கள். பிறகு இதிலும் மாற்றம் ஏற்பட்டது.


1978-ல் 'டி.என்.ஏ. மறுசேர்க்கை தொழில்நுட்பத்தைப் (DNA recom- binant technology) பயன்படுத்தி மனித இன்சுலினைப்போலவே உள்ள புதிய இன்சுலினை செயற்கைமுறையில் தயாரிக்கத் தொடங்கினர். ஈ.கோலை (E.Coli) எனும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனித மரபணுவை இணைத்து வளர்க்கிறபோது, மனித இன்சுலினை ஒத்த


புதுவகை இன்சுலினை அது சுரக்கிறது. பக்கவிளைவுகள் குறைந்த, அதிக பலன் தருகிற மகத்தான மருந்து இது. இப்போது இதன் வேதிக்கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்து பலதரப்பட்ட இன்சுலின்களைத் தயாரிக்கிறார்கள்.


இவற்றை டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு, மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் போடுகிறார்கள். அறுவை சிகிச்சை. ஆறாத புண், நோய்த்தொற்று, மிகு ரத்தச் சர்க்கரை மயக்கம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்குத் தற்காலிகமாகப் போடுகிறார்கள். இதனால் ரத்தச் சர்க்கரை இவர்களுக்கு நன்றாகக் கட்டுப்படுகிறது. நீரிழிவால் ஏற்படுகிற பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இன்சுலின் செய்யும் அற்புதம் இது !

Post a Comment

Previous Post Next Post

Contact Form