தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி......

இந்திய தபால் துறை சார்பில், இளைய தலைமுறையினரிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்யும் வகையிலும், இன்றைய இளைஞர்களின் சிந்தனையை சேகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த ஆண்டு, 'எழுதுவதின் மகிழ்ச்சி- டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் கடிதம் எழுதலாம். ஒரு காகிதத்தில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது இன்லேண்ட் லட்டரில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். 

அந்த கடிதத்தை, 'தலைமை தபால் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தை கையால் மட்டுமே எழுத வேண்டும். தபால் தலை ஒட்டப்பட்ட உறையில் கடிதங்களை அனுப்ப வேண்டும்.

18 வயதுக்குட்பட்டோர், 18 வய துக்கு மேற்பட்டோர் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. தமிழக அளவில் சிறந்த 3 கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும்.

மேலும் தமிழக அளவில் தேர்வு செய்யப்படும் கடிதங்கள் தேசிய அளவிலான போட்டிக்கும் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழக அளவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

கடிதங்களை அனுப்ப வருகிற டிசம்பர் மாதம் 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். 

மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 

Post a Comment

Previous Post Next Post

Contact Form