இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 30 லட்சம் பேரைக் காவுகொண்ட பஞ்சத்தின் நினைவுகூட ஆறவில்லை.
1950. முதல் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டது. விவசாயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்தார் முதல் பிரதமர் நேரு.
மூன்று மிகப் பெரிய அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டது:
1. பக்ரா நங்கல், ஹிராகுட், நாகார்ஜுன சாகர். இப்போது பக்ரா நங்கல் அணை ஒரு கோடி ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. 1,500 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
1949ல் அமெரிக்காவில் உள்ள மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு விஜயம் செய்த நேரு, அதே போன்ற உயர்கல்வி அமைப்புகளை இந்தியாவில் உருவாக்க நினைத்தார். இதில் மௌலானா ஆஸாத்தின் ஊக்கமும் சேர்ந்துகொள்ள ஐஐடிக்கள் பிறந்தன. நேருவின் காலத்திலேயே காரக்பூர், பம்பாய், மெட்ராஸ், கான்பூர், தில்லி ஆகிய இடங்களில் ஐஐடிகள் உருவாக்கப்பட்டன.
இதே பாணியில் உருவாந ஐஐஎம், இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் போன்றவையும் நேருவின் சிந்தனையே.
அடுத்ததாக, இந்தியாவை அறிவியல் ஆய்வில் மேம்பட்ட ஒரு தேசமாக உருவாக்க பல விஞ்ஞானிகளை ஒன்று சேர்த்தார் நேரு.
இஸ்ரோவில் விக்ரம் சாராபாய் மற்றும் சதீஷ் தவான், ஐஐஎஸ்சியில் சர்.சி.வி. ராமன், பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரில் ஹோமி ஜே. பாபா, இஸ்ரோவில் சதீஷ் தவான், கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்சில் எஸ்.எஸ். பட்நாகர் ஆகியோர் இணைந்தனர்.
புதிய, நவீன இந்தியா குறித்த கனவு அவருக்கு இருநத்து. அதற்காக பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அணு சக்தித் துறை (1954), பாபா அணு ஆய்வு மையம் (1954), பிஸிக்கல் ரிசர்ச் லபோரட்டரி (1947), இஸ்ரோ (1962), தேசிய வேதிதியல் ஆய்வுக்கூடம் (1950), எரிபொருள் ஆய்வு மையம் (1946), மத்திய கண்ணாடி மற்றும் செராமிக்ஸ் ஆய்வு மையம் (1950)தேசிய உலோக ஆய்வுச்சாலை (1950) ஆகியவை நேரு நிறுவிய சில நிறுவனங்கள்.
மருத்துவத் துறையிலும் நேருவின் சாதனைகள் எட்ட முடியாதவை. 1956ல் எய்ம்ஸ் உருவாக்கப்பட்டது. 1958ல் மௌலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரி,
1961ல் கோவிந்த வல்லப பந்த் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் ஆகியவற்றை நிறுவினார். 1946ல் 15 மருத்துவக் கல்லூரிகளே இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 1965ல் 81ஆக உயர்ந்தது.
1952ல் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜி உருவாக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மலேரியா காய்ச்சல் கொடூரமாக பரவிவந்தது. 1953ல் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கின. வெகு விரைவிலேயே
4. சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம்: பிறக்கும்போதே எதிரிகளாக பிறந்த இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து, சட்லஜ், பியாஸ், ராவி, ஜீலம், செனாப் ஆகிய நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம் செய்வது எவ்வளவு கடினமானதாக இருக்கும்?
ஆனால், நடந்தது. 1960 செப்டம்பர் 19ஆம் தேதி பிரதமர் நேருவும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் இப்போதுவரை நீடிக்கிறது.
5. வலுவான வெளியுறவுக் கொள்கை: உலகம் அமெரிக்கா - சோவியத் எனப் பிரிந்துகிடந்த நாட்களில், இருதரப்பிற்கும் பொதுவாக அணிசாரா கொள்கையை உருவாக்கினார் நேரு.
6. இரும்பு ஆலைகள்: ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்பை அளிக்கும் நோக்கத்தோடு, சட்டீஸ்கரின் பிலாயில் மிகப் பெரிய உருக்கு ஆலை, பொகாரோ உருக்கு ஆலை ஆகியவை உருவாக்கப்பட்டன.
7. அணுசக்தி அமைப்புகள்: 1954ல் ட்ராம்பேயில் அணுசக்தி அமைப்பு உருவாக்கப்பட்டது. ( Atomic Energy Establishment, Trombay (AEET)).
8. ஐந்தாண்டுத் திட்டங்கள்: நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட தேசிய திட்டக் கமிஷனும் ஐந்தாண்டுத் திட்டங்களும் உருவாக்கப்பட்டன. திட்டக் கமிஷனின் தலைவராக பிரதமர் நேரு இருந்தார்.
9. சாகித்ய அகாதெமி; National Academy of letters என்று அழைக்கப்பட்ட சாகித்ய அகாதெமி 1954 மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்கான அகாதெமியாக 1954 மார்ச்சில் லலித் கலா அகாதெமி உருவாக்கப்பட்டது.
தேச கட்டமைப்பிலேயே முதலீடுசெய்யப்பட்டது. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு எல்ஐசி கடன் கொடுத்தது. எல்ஐசி முதலீடு செய்த பணத்தை வைத்தே பிலாய் உருக்காலை போன்ற மிகப் பெரிய உருக்காலைகள், மாநில மின்வாரியங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள், சாலைகள் போன்றவை இந்தியாவில் உருவாக்கப்பட்டன.
10. உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களில் சிஇஓக்களாகவும் கார்ப்பரேட் தலைவர்களாகவும் இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நேருவின் குழந்தைகள்தான். இவர்கள் எல்லோருமே நேரு உருவாக்கிய ஐஐடியிலும் ஐஐஎம்களிலும் படித்தவர்கள்.
11. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு கிட்டத்தட்ட 75 institutions நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்டன. அவற்றில் சில:1. பக்ரா நங்கல் அணை, 2. பாரத மிகுமின் நிறுவனம் - பெல், 3. அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் - எய்ம்ஸ் 4. ஓஎன்ஜிசி, 5.எல்.ஐ.சி. 6. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 7. நேஷனல் லைப்ரரி ஆஃப் இந்தியா 8. நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டிசைன் 9. ஐஐடிகள் 10. கேந்த்ரிய வித்யாலயாக்கள் 11. காதி மற்றும் ஊரக தொழில்துறை கமிஷன், 12. நவீன வடிவமைப்பில் சண்டீகட் நகரம் 13. இந்தியத் தேர்தல் ஆணையம், 14. இந்திய திட்டக் குழு.
12. இப்போது இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று. இவையெல்லாம் ஒரு மனிதனின் கனவிலிருந்து உருவானவை. இந்த இன்ஸ்ட்டிடியூஷன்களும் அவற்றின் வளர்ச்சியும் வரலாற்றில் நேருவின் இடத்தை உறுதிசெய்யும்.