"புயல் கூண்டு"

புயல் காலத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்றான "புயல் கூண்டு".


துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு, இரண்டாம் எண் கூண்டு ஏத்திட்டாங்க என்ற செய்தி பார்ப்போம். 

புயல் கூண்டு எச்சரிக்கையும் அதன் விளக்கமும்...🌪️ பற்றி பார்ப்போம். 

தகவல் தொடர்பு எவ்வளவு அதிகரித்துவிட்டாலும் மீனவர்களைப்பொறுத்தவரை இன்னும் கலங்கரை விளக்கின் தேவை அற்றுப்போய் விடவில்லை. அதே போன்றதுதான் புயல் கூண்டு ஏற்றப்படுவதும்.

புயல் மையம் கொண்டதிலிருந்து அதி தீவிர புயலாக மாறுவது வரையிலான மாற்றங்களை மக்களுக்கு அறிவிக்க இந்த புயல்கூண்டு ஏற்றும் முறை பின்பற்றப்படுகிறது. 


மொத்தம் 11 வகையான புயல் கூண்டுகள் ஏற்றப்படும்.


ஒவ்வொரு எண் புயல் கூண்டும் ஓவ்வொரு நிலையை அறிவிப்பவை.


✅ ஒன்றாம் எண் கூண்டு:

புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.


✅ இரண்டாம் எண் கூண்டு:

புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.


✅ 3-ம் எண் கூண்டு: 

திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

✅நான்காம் எண் கூண்டு:

துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை.


✅ ஐந்தாவது எண் கூண்டு:

துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.

✅ ஆறாவது எண் கூண்டு:

துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.


✅ ஏழாவது எண் கூண்டு:

துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை.

✅ 8-ஆம் எண் கூண்டு:

 ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

✅ 9-ஆம் எண் கூண்டு:

ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

✅ 10-ஆம் எண் கூண்டு: 

புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

✅ 11-ஆம் எண் கூண்டு: 

இந்த புயல் எச்சரிக்கைதான் உச்சகட்டமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறதென்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பு முற்றிலும் முறிந்துபோனது விட்டது என்று பொருள்.

.
.
.
.

Thanks for reading 📚.......

For more post follow blog 😊 

Link: pocketliterature2022.blogspot.com

Post a Comment

Previous Post Next Post

Contact Form